Skip to main content
பொது அறிவு வினாக்கள் | TNPSC group 2 & 4

- பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது : அமாவாசை
- சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவது: பெளர்ணமி
- பூமி சுழலும் பக்கம்: மேற்கிலிருந்து கிழக்காக
- பூமிக்கு சூரிய ஒளி வர எடுக்கும் நேரம்: 480 விநாடிகள்
- சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் பூமியின் மீது விழும் போது “சூரிய கிரகணம்” ஏற்படும் அதாவது அமாவாசையில் வரும்
- சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் போது “சந்திரகிரகணம்” ஏற்படும்; அதாவது பெளர்ணமியில் வரும்
- நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
- சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
- பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
- நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
- கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
- மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
- ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
- மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
- பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
- உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
- ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.
- பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
- பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
- நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
- நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
- யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
- ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
Comments
Post a Comment