பொதுத்தமிழ் |TNPSC Group 2 & 4 | 9 std notes|


1.முசிறி துறைமுகம் பட்டினத்தில் அரேபியர் வணிகம் செய்த இடத்திற்கு எவ்வாறு பெயரிடப்பட்டிருந்தது?  பந்தர் (கடைவீதி)

2.முசிறி அலெக்ஸாண்ட்ரியா ஒப்பந்தம் என்பது எந்த காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்?  பொது ஆண்டுக்குப் பின் 150

3.முசிறி அலெக்சாண்டிரியா ஒப்பந்தத்தின்படி தமிழ் வணிகன் ஒருவன் கப்பலில் ஒருமுறை கொண்டு சென்ற வணிக பொருள்களின் பண மதிப்பு எவ்வளவு கிராம் வெள்ளியின் எடைக்கு ஈடானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது?  2,94,86000

4.காவிரிப்பூம்பட்டினம் எவ்வாறு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது  ? மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம்

5.அழகன்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓட்டில் இடம்பெற்றுள்ள கீறல் கோட்டோவியம் எதனை குறிக்கிறது?   வணிக கப்பல்

6.துறைமுகங்களில் கிடங்குகள் இருந்ததாகவும், சுங்கத் தீர்வைகள் அங்கேயே வசூலிக்கப்பட்டன என்றும் கூறும் நூல் எது ?    பட்டினப்பாலை

7.கோவலன் ,கண்ணகி, மாதவி மணிமேகலை ஆகியோர் யாருடைய ஆட்சிக் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் வாழ்ந்திருந்தனர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன?  இளவரசன் கிள்ளிவளவன்

8.பாண்டியர்களின் ஆளும் மன்னரை அடுத்து அரசாள வரும் பட்டத்து இளவரசர் எந்த துறைமுக நகரில் தங்கி நிர்வாகம் கற்றனர்?  கொற்கை

9.பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்தபின் கொற்கையில் இருந்த பட்டத்து இளவரசன் வெற்றிவேற் செழியன் மதுரை வந்து அரியணை ஏறினான் எனும் செய்தியை சிலப்பதிகாரத்தில் எந்தக் காதை கூறுகிறது ? நீர்ப்படைக் காதை

10.வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர் எனக் கூறும் நூல் எது?  அகநானூறு( 350 பாடல்)

11.பாண்டிய மன்னர்கள் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு முத்துகளை பரிசாக அளித்தார்கள் என்று கூறும் அறிஞர் யார்?     ஸ்ட்ராபோ

12.கொற்கை துறைமுகத்தில் எத்தனை அரேபிய குதிரைகள் வந்து இறங்கின என்று குறிப்பிடுகிறார்கள்?           16 ஆயிரம்

13.பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் நிறைந்த தெருவிற்கு என்ன பெயர்?  அஃக சாலை

14.முசிறி துறைமுகத்துக்கு நேரே நடுக் கடல் வழியாக விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டு பிடித்தவர் யார்?   ஹிப்பல்ஸ்

15.யவனர் தமிழர் வணிகத்தை விரிவுபடுத்தியவர் யார் ?  அகஸ்டஸ் சீசர்

16.கௌடில்யர் ,மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டுப் பயணிகள் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க நகரம் எது?  மதுரை

17.ஓரெதுகை பெற்ற இரண்டு அடிகள் அளவொத்து வருவது எது?    
சிந்து பாவகை

18.கடுவெளிச் சித்தரின்' பாவம் செய்யாதிரு மனமே' என்னும் பாடல் எந்த பாவகையை சேர்ந்தது? சிந்து பா

19.சிந்துக்குத் தந்தை எனப் போற்றப்படுபவர் யார் ?  பாரதி

20.மதுரைக்காஞ்சி பாடியவர் யார்? மாங்குடி மருதனார் 

21. மாங்குடி என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?  திருநெல்வேலி

22.மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார் ?    13

23.மதுரைக்காஞ்சி என்ற நூலில் காஞ்சி என்பதன் பொருள் என்ன?     நிலையாமை

24.மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளைக் கொண்டது?       782

25. மதுரை  பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்ற அடி எவ்வளவு?54

Comments