ஆரோவில் :
புதுச்சேரி அருகாமையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தின் உதவியுடன் அமைந்துள்ள சர்வதேச நகரமாகும். இது தற்போது மத்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது.
காசி:
உத்திரப் பிரதேசத்தில் உள்ளது. இது இந்துக்களின் புண்ணியத்தலம். காசி விஸ்வநாதர் ஆலயம். காசி இந்து பல்கழைக்கழகம் முதலியன இங்கு உள்ளது.
பிலாய்
மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. இங்கு இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உருக்காலை மற்றும் டீர்நுடு (டீhயசயவ ர்நயஎல நுடநஉவசைஉயட டுவன) நிறுவனம் உள்ளது.
சிதம்பரம்:
கடலு}ர் மாவட்டத்தில் உள்ளது. நடராசர் ஆலயம் மிகச்சிறப்பு வாய்த்து. இக்கோயிலின் கருவறை விமானங்கள் பொன் தகடுகளால் ஆனவை. அண்ணாமலைப் பல்கழைக்கழகம் இங்கு உள்ளது.
புலந்த் தர்வாசா:
பதேபூர் சிக்ரியிலுள்ள உயரமான வாசலாகும். இது அக்பரால் தக்காண வெற்றியைக் கொண்டாட கட்டப்பட்டது.
பரிதாபாத்:
டெல்லிக்கு அருகிலுள்ள தொழிற்கூடங்கள் நிறைந்த நகரம்.
தண்டி:
காந்தி உப்பு சத்தியாகிரகம் செய்த இடம். இது குஜராத் மாநிலத்தில் உள்ளது.
ஹரித்துவார்:
இந்துகளின் புண்ணியத்தலம். இது உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ளது.
கோல்கொண்டா:
ஹைதராபாத்திற்கு அருகில் உள்ள நகரம் இது. இங்கு முன்பு ஒரு வைரச்சுரங்கம் இருந்தது.
இந்தியா வாசல்:
குடியரசுத் தலைவரின் மாளிகையை நோக்கிக் கட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னம். 1914-21 வரையான காலப்பகுதியில், முதல் உலகப் போர் நடைபெற்றபோது பிரான்ஸ், மெசபடோமியா, ஈரான், கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் உயிரிழந்த 82,000 பிரித்தானிய இந்தியப் படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.
ஜாலியன் வாலாபாக்:
அமிர்தசரசில் உள்ள ஒரு இடம். இங்கு 1919-ல் ஜெனரல் டயர் என்பவரால் பல தேச பக்தவர்கள் சுடப்பட்டு இறந்தனர். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்.
ஜூம்மா மசுதி:
இந்தியாவிலேயே மிகப்பெரிய மசு+தி இதுவாகும். டெல்லியில் இருக்கும் இந்த மசூதியைக் கட்டியவர் ஷாஜகான்.
ஜோக் நீர்வீழ்ச்சி:
இந்தியாவிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி. 830 அடி உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி உள்ள இடம் கர்நாடகா.
ராஜ்காட்:
இங்கு காந்தி சமாதி உள்ளது. டெல்லியில் உள்ள யமுனை நதிக்கரையில் இச்சமாதி அமைந்துள்ளது.
குருஷேத்திரம்:
இப்போது பானிபட் என அழைக்கப்படுகிறது. இங்குதான் மகாபாரத போர் நடைபெற்றது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது. விவேகானந்தர் பாறை, குமரி அம்மன் ஆலயம், திருவள்ளுவர் சிலை போன்றவை இங்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய இடங்களாகும்


Comments
Post a Comment